த.வெ.க. மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை கவுரவிக்கும் விஜய்
|விக்கிரவாண்டியில் த.வெக. மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை விஜய் கவுரவிக்க உள்ளார்
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் த.வெக. மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை விஜய் கவுரவிக்க உள்ளார். நிலம் கொடுத்தவர்களை விருந்து அளித்து விஜய் கவுரவிக்க உள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .