< Back
மாநில செய்திகள்
த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு

தினத்தந்தி
|
26 Feb 2025 8:24 AM IST

நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தவெகவை சேர்ந்த 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜய்யின் வீட்டிற்குள் வீசினார்.

அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்