< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
த.வெ.க. முதல் அரசியல் மாநாடு: நடிகர் விஜய்க்கு, சீமான் வாழ்த்து
|26 Oct 2024 7:36 PM IST
விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் தன்னுடைய 'எக்ஸ்' தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும். தம்பி விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்" இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.