< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
|26 Dec 2024 11:07 AM IST
சென்னை மெரினா கடற்கரையில் 20வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை,
கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் சுனாமி பாதிப்புக்குள்ளான இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் சென்னை மெரினா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, பொதுமக்களுடன் மவுன ஊர்வலத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்.