தமிழக பாஜகவை நம்புவது வீண் - எஸ்.வி.சேகர்
|தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
சென்னை,
சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நடிகை கஸ்தூரி பேசியது மிகப் பெரிய தவறு. ஏனென்றால் எனக்கு என்ன வேனும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கை காட்டி பல விஷயங்களை பேசுவது, ஒரு சமுதாய கூட்டத்தில் அரசியல் பேசுவது, நல்லதல்ல.
தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கவில்லை; மாறாக பாஜகவில்தான் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது. அதனால் நான் பாஜகவில் இருந்து நேற்றே விலகி வந்துவிட்டேன். பத்து வருடம் பாஜகவில் இருந்து பட்டபாடு போதும். எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை; கட்சிக்குதான் நான் தேவை. அரசியல் மற்றும் தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது.
10 வருடமாக பட வாய்ப்புகளே வரல.. அதுக்குன்னு பாஜக எடுக்குற படத்துல எல்லாம் நான் நடிக்க முடியுமா?. பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரசாரம் செய்வேன். பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது. இவ்வாறு அவர் கூறினார்.