< Back
மாநில செய்திகள்
திருச்சி: மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் - பொதுமக்கள் அதிர்ச்சி
மாநில செய்திகள்

திருச்சி: மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் - பொதுமக்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
10 Dec 2024 5:29 PM IST

மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. காதை பிளக்கும் வகையில் கேட்ட அந்த சத்தத்தால் வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள், கண்ணாடிகள் ஆகியவை அதிர்ந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த சத்தம் ஒரே ஒரு முறைதான் கேட்டதாகவும், ஆனால் அதன் அளவு மிகவும் அதிக அளவில் இருந்ததாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், நில அதிர்வு எதுவும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை எனவும், சத்தம் எதனால் வந்தது என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்