< Back
மாநில செய்திகள்
திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார்: சீமான் ஆவேசம்
மாநில செய்திகள்

திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார்: சீமான் ஆவேசம்

தினத்தந்தி
|
5 Dec 2024 1:44 PM IST

திருச்சி எஸ்.பி. வருண்குமாருடன் மோதத் தயார் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

சென்னை,

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பின் படி 13 ஆண்டுகளாக இயக்கம் நடத்துகிறோம்; தேர்தலில் நின்று 3 ஆவது கட்சியாக உருவெடுத்துள்ளோம். தனித்து நின்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளோம். நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்; அதை கண்காணிக்க வேண்டும் என்று எதை வைத்து திருச்சி எஸ்.பி. வருண் குமார் கூறுகிறார். ஏற்கனவே என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது; அவர்களுக்கு தெரியாத நாங்கள் பிரிவினைவாத இயக்கமா இல்லை என்று.

ஒரு அடிப்படை தகுதி கூட இல்லாமல் அவர் (திருச்சி எஸ்.பி. வருண் குமார்) எப்படி ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருடன் மோதத் தயார்; மோதுவோம் வா. என் கட்சியை குறைசொல்வதற்காகத்தான் ஐ.பி.எஸ். ஆகியிருக்கிறாரா வருண்குமார்?. அவரால் எங்களை என்ன பண்ண முடியும்.

மத்திய அரசுக்கு நிதி எங்கே இருந்து வருகிறது. மாநிலங்களில் அளிக்கக்கூடிய நிதியே மத்திய அரசின் நிதி. அவ்வாறு இருக்க பேரிடர் காலங்களில் உதவாத பணம் எதற்கு?. ஆனால் எங்களுக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும்; தேசப் பற்று இருக்க வேண்டும் என்கிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்டால் நாங்கள் தேசத் துரோகிகள் ஆகின்றோம்.. கேள்வியை கேட்டா நாங்க ஆன்டி இந்தியன்.. அப்பத்தா இந்தியன் என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்