ஓசூரில் லாரி ஓட்டுநரை தாக்கிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ
|லாரி டிரைவர் மதுபோதையில் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது சோதனைச்சாவடி அருகே பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சத்தியமூர்த்தி என்பவர், அந்த லாரியை நிறுத்தி உள்ளார்.
பின்னர் லாரியை அதிவேகமாக ஓட்டிவந்த டிரைவரை போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகளை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லாரி டிரைவர் மதுபோதையில் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வந்ததாகவும், லாரி டிரைவரை நிற்க சொல்லியும் நிற்காததால் அவரை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.