< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
|16 Oct 2024 6:55 PM IST
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பவானி ஆற்றில் எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க நீர்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பு கொடிவேரி அணையின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.