< Back
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மாநில செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தினத்தந்தி
|
19 Dec 2024 7:56 AM IST

7 நாட்களுக்கு பிறகு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிக்கரைகள் சேதமடைந்தன. மேலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐந்தருவி, புலியருவியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு அங்கு மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து மெயின் அருவியின் ஓரமாக நின்று குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 7 நாட்களுக்கு பிறகு மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்