
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 March 2025 7:31 PM IST
கோவையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
- 27 March 2025 7:04 PM IST
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பீல்டிங் தேர்வு செய்து உள்ளது.
- 27 March 2025 6:46 PM IST
எகிப்து அருகே செங்கடலில், 44 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.
- 27 March 2025 5:51 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
- 27 March 2025 5:12 PM IST
கோவையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
- 27 March 2025 5:08 PM IST
சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரானி கொள்ளையன் சல்மானுக்கு ஏப்ரல் 9-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
- 27 March 2025 4:47 PM IST
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றார். மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை.
தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஒன்றியத்திலும் 2 இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட ஏழை ஆண்-பெண் தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
- 27 March 2025 4:38 PM IST
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னை எழும்பூர் - கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது.
சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் தீ பரவியது. இதனால் தகவல் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிக்னல் கோளாறை சீரமைக்கும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- 27 March 2025 4:33 PM IST
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை தமிழகம் வருகிறார். அவர் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
- 27 March 2025 3:39 PM IST
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் அலுவலர்கள் அறையில் திடீரென திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.