
சென்னை
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 March 2025 7:05 PM IST
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
- 23 March 2025 6:51 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றது.7.30 மணி அளவில் நடைபெறும் போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானம் சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாலாஜா சாலை பாரதி சாலை விக்டோரியா ஹாஸ்டல் சாலை உள்ளிட்ட சாலை சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்களும் மும்பை அணியின் ரசிகர்களும் அவரவர்களின் விருப்ப டீசர்ட் அணிந்து மைதானத்திற்கு சென்றுள்ளனர்.
- 23 March 2025 6:06 PM IST
ஓ பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 23 March 2025 5:32 PM IST
ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 23 March 2025 5:29 PM IST
நிம்மோனியா பாதிப்பால் ஜெமெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகனுக்கு திரும்ப உள்ளார்.
- 23 March 2025 5:27 PM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- 23 March 2025 5:09 PM IST
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. குற்றம் சொல்வது அ.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. குற்றங்களை தடுப்பதற்காக தான் சுட்டிக்காட்டுகிறோம் என பேசியுள்ளார்.
- 23 March 2025 4:49 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 67 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 23 March 2025 4:28 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார்.
- 23 March 2025 3:54 PM IST
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பேருந்துகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.