
சென்னை
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 March 2025 7:08 PM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 21 March 2025 7:01 PM IST
என்னை நம்பால் கெட்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை; மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக; ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- 21 March 2025 6:08 PM IST
கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட்
கர்நாடக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் 18 பேர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- 21 March 2025 5:54 PM IST
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அங்கம் வகிப்பது கவனிக்கத்தக்கது.
- 21 March 2025 5:10 PM IST
கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரமாக வெளுத்த கனமழை
சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்த நிலையில், அதற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த சூழலில் இன்று கனமழை பெய்துள்ளதால் தேயிலை, காபி விவசாயிகள் மகிழ்ச்சி
- 21 March 2025 4:02 PM IST
பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
அச்சரப்பாக்கம் அடுத்த செம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் பேருந்தில் இருந்து இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு
- 21 March 2025 3:10 PM IST
மதுரையில் இளைஞர் கடத்தல்
மதுரையில் சாலையில் நின்றிருந்த இளைஞரை தாக்கி கடத்திய மர்ம கும்பல்
பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலக சாலையில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
இருசக்கர வாகனத்தில் வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை
கடத்தப்பட்டவர் யார்? கடத்தலுக்கான காரணம் என்ன? - விசாரணை தீவிரம்
- 21 March 2025 3:03 PM IST
25 நாட்களில் முழு நேர அரசியலில் விஜய்
25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்
படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டம் என தகவல்
தவெக தலைவர் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது
படப்பிடிப்பு முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் இறுதியில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டம்