< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மாநில செய்திகள்

ராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தினத்தந்தி
|
22 Nov 2024 8:26 AM IST

வெள்ளநீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி பெரும்பாலானோர் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

குடியிருப்புகளில் தேங்கிய வெள்ளநீர் மோட்டார்கள் வைத்து அகற்றப்பட்டு வருகிறது. கனமழை பெய்து வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்கு அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைக்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக ராமேசுவரத்தில் உள்ள தீவுப்பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.11.2024) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக பெய்த மழைநீர் பள்ளிகளில் தேங்கியுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்