< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
5 Dec 2024 6:41 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் விழுப்புரம் மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியுருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடைபெற்று வருவதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்