< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம்
மாநில செய்திகள்

திருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம்

தினத்தந்தி
|
21 Nov 2024 8:16 PM IST

நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசமானது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தனியார் நூற்பாலையில், பஞ்சு பேல்கள் இருந்த கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீ மளமளவென பரவி, அங்கிருந்த பஞ்சு பேல்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் பேல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்