< Back
தமிழக செய்திகள்
திருப்பூர்: கல்குவாரி நீரில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு
தமிழக செய்திகள்

திருப்பூர்: கல்குவாரி நீரில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
27 Jan 2025 5:11 PM IST

கல்குவாரியில் துணி துவைப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர். பல்லடம் அருகே உள்ள வேலம்பாளையத்தில் செயல்படாத கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் உள்ள நீரில் துணி துவைப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்