< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பத்தூர்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஐ.டி. ஊழியர் பலி
|7 Jan 2025 12:19 AM IST
ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை ஜெயமாதா நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்பதற்காக ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற சுதாகர் தவறி விழுந்து, ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.