< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
|9 Jan 2025 11:19 AM IST
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
திருப்பதி திருக்கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.