< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் 25 நாட்கள் ரத்து

கோப்புப்படம்

திருநெல்வேலி
மாநில செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் 25 நாட்கள் ரத்து

தினத்தந்தி
|
14 March 2025 7:03 PM IST

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரெயில்கள் 20.03.2025 முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன.

*திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும்.

*திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரெயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்