< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
5 March 2025 7:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும், சனிக்கிழமையை பணி நாளாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்