திருவண்ணாமலை மண் சரிவு: 7 வது நபரின் உடலும் மீட்பு
|மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருவண்னாமலை,
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது. அப்போது நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திடீரென மகா தீப மலையை ஒட்டியுள்ள வ.உ.சி. நகர், 11-வது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், பெரிய பாறாங்கற்கள் மலை உச்சியில் இருந்த குடிசை வீடு உள்பட பல வீடுகள் விழுந்தன. சேறும் சகதியுமான மண் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இதில் வீட்டுக்குள் இருந்த 7 பேர் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணி தொடங்கிய நிலையில், நேற்று மாலை ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு வரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.இன்று காலை தொடர்ந்த மீட்புப் பணியின்போது மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 7-வது நபராக சிறுமி ரம்யாவின் உடலை பேரிடர் மீட்புக்குழு மீட்டுள்ளது.