< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

ஞாயிறு விடுமுறை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
29 Dec 2024 12:22 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வுக்கான பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளிக்கிறது.

பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்