< Back
மாநில செய்திகள்
தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி
மாநில செய்திகள்

தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி

தினத்தந்தி
|
26 Nov 2024 10:44 AM IST

வெளி மாவட்டங்களில் இருந்து கியூ ஆர் கோடு ஒட்டப்படாத ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவண்ணாமலை நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதில் உள்ளூர் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக உள்ளது. இதில் யார் தவறு செய்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உள்ளூரில் ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள் வெளியூர் ஆட்டோ டிரைவர்களை குறை சொல்வது வாடிக்கையாக உள்ளது.

எனவே திருவிழாவின் போது காவல்துறை மூலம் ஆட்டோக்களுக்கு டிரைவர் பெயர், முகவரி, ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக், போட்டோ போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கியூ ஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.

அந்த அடையாள அட்டை இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டினால் சம்பந்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கூடாது. அதிக நபர்களை ஆட்டோக்களில் ஏற்றி செல்ல கூடாது. முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்க கூடாது. தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்