< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்-திருமாவளவன்
|24 Nov 2024 8:20 PM IST
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவன் பணி ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திராவிட இலக்கியங்கள் மற்றும் பொதுவுடமை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நிகழ்வுகளை திருவள்ளுவன் ஒருங்கிணைத்தார். கவர்னரின் விருப்பம் அறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பது தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காரணமெனத் தெரியவருகிறது. எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை கவர்னர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.