< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம்
|21 Nov 2024 8:49 PM IST
பழனி முருகன் கோவிலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்,
கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் செய்தார்.
அவருக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த திருமாவளவன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.