< Back
மாநில செய்திகள்
மராட்டிய தேர்தலில் விசிக  10 தொகுதிகளில் போட்டி- திருமாவளவன்
மாநில செய்திகள்

மராட்டிய தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டி- திருமாவளவன்

தினத்தந்தி
|
19 Oct 2024 9:59 PM IST

மராட்டிய தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 20-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்தநிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தல் கட்சியுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.அதன்படி, கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி,கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர்அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட்(மும்பை), கன்னட் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்