< Back
மாநில செய்திகள்
திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்: இரா.முத்தரசன்
மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்: இரா.முத்தரசன்

தினத்தந்தி
|
22 Oct 2024 10:57 PM IST

திமுக கூட்டணி மேலும் பலப்படும் என்று இரா.முத்தரசன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக கூட்டணியை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, அவரது ஆசை மற்றும் விருப்பம். அதிமுக எரிந்துகொண்டிருக்கிறது; முதலில் அதை எடப்பாடி பழனிசாமி அணைக்க வேண்டும். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். இந்த அணி தொடரும். மேலும் பலப்படும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தப்படுத்த வேண்டும், குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், மற்றவர்களுக்கு வழங்குவதுபோல இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்னதாக தற்போது தமிழ்தாயை மதிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை சீமான் முதலில் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்