சென்னை
சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் நாளை மின்சாரம் இருக்காது
|பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒருசில பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் 18.11.2024 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால், மதியம் 2.00 மணிக்கு முன் மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும்.
நாளை (18.11.2024) மின் தடை செய்யப்படும் பகுதிகள் விபரம்;
திருமுல்லைவாயல்: மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீனிவாசா நகர், சப்த கிரி நகர், பார்கவி நகர்.
தண்டையார்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு I பகுதி, மன்னப்பன் தெரு I பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.