< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி

தினத்தந்தி
|
5 Dec 2024 7:19 AM IST

செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியையும், மத்திய அரசின் வல்லுனர் குழு ஆய்வுக்கு பின் பாதிப்புக்கான நிவாரண நிதியையும் மத்திய அரசு வழங்க முதல்-அமைச்சர் கேட்டுள்ளார்.

பெரிய வெள்ளத்தில் தண்ணீர் அதிவேகமாக செல்லும்போது அந்த சக்தியை ஈடுகொடுக்க முடியாமல் திருவண்ணாமலை அருகே உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம். அதில் என்ன என்பதை வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிவிப்பார்கள்.

ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும், கொடுக்காததும் முதல்-அமைச்சரின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. செந்தில்பாலாஜி சிறைக்கு செல்லும்போது அமைச்சராகதான் இருந்தார். சிறையிலும் சிறிது நாட்கள் அமைச்சராக இருந்தபின் பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்தபின் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்தவிதமான தவறும் எங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்