< Back
மாநில செய்திகள்
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
மாநில செய்திகள்

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

தினத்தந்தி
|
28 Oct 2024 6:14 PM IST

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்