< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபர்... அடுத்து நடந்த விபரீதம்
மாநில செய்திகள்

இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபர்... அடுத்து நடந்த விபரீதம்

தினத்தந்தி
|
12 Nov 2024 11:26 AM IST

இளம்பெண் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அவனிகா. இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

அவனிகாவின் உறவினரான ராம்குமார் என்பவருடன் கருப்பையா கேரளாவுக்கு தினமும் வேலைக்கு சென்று வந்தனர். இதனால் கருப்பையா வீட்டுக்கு ராம்குமார் அடிக்கடி சென்று வந்தார். இதனால் ராம்குமாருக்கும், அவனிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இந்த விவகாரம் கருப்பையாவுக்கு தெரியவரவே, அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு அவனிகா வீட்டுக்கு ராம்குமார் சென்றார். அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்தனர். இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டின் கதவு தாழ்ப்பாளை வெளிப்புறமாக பூட்டினார். இதனை அறிந்த 2 பேரும் அதிர்ச்சி அடைந்து கதவை திறக்க சொல்லியும் அவர் திறக்கவில்லை.

மேலும் அந்த நபர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். இதற்கிடையே வீட்டுக்குள் சிக்கிய அவனிகா, ராம்குமாரை மாடியில் உள்ள அறையில் பரணுக்குள் ஒளிந்து கொள்ளுமாறு கூறினார். இதைத்தொடர்ந்து ராம்குமார் மாடிக்கு சென்று விட்டார்.

அதேநேரத்தில் ராம்குமார் உடனான கள்ளக்காதல் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என்று அவனிகா மனம் உடைந்து அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பிறகு கதவை திறந்து பொதுமக்கள் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டுக்குள் அவனிகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்