தமிழகத்தில் நடப்பது சிறப்பான ஆட்சியா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் - சீமான் பேட்டி
|மக்கள் கவலையோடும், கண்ணீரோடும் இருப்பதை என்னுடன் வந்து பார்த்தால் தெரியும் என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடப்பது சிறப்பான ஆட்சியா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக உள்ளது என்று அர்த்தம். மக்கள் கவலையோடும், கண்ணீரோடும் இருப்பதை என்னுடன் வந்து பார்த்தால் தெரியும்.
யார் யாருடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு என்ன? கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். 2026 தேர்தலில் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். 117 பெண்கள், 117 ஆண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்போம்.
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கள்ள உறவில் இல்லை. நேரடியான கூட்டணியில்தான் உள்ளனர். மற்ற மாநில முதல்வர்களின் வீடுகளில் ஐடி சோதனை நடக்கிறது. ஆனால் இங்கு நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.