< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|22 Nov 2024 2:19 PM IST
தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மதுரவாயலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதவாது;-
"தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் கொலை என்ற நிலை மாறி, தற்போது நொடிக்கு நொடி கொலை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதன் பிறகு தி.மு.க.வுக்கு நிரந்தர வனவாசம் என்ற நிலைதான் ஏற்படும்."
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.