< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கட்டபொம்மனின் புகழ் வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|16 Oct 2024 12:17 PM IST
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
சென்னை ,
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 234-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள். அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும். என தெரிவித்துள்ளார்.