< Back
மாநில செய்திகள்
திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மாநில செய்திகள்

திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தினத்தந்தி
|
6 Nov 2024 2:28 PM IST

கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழகத்தின் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அரசாணை 3.9.2024 அன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை அனுப்பர்பாளையத்தில் அமைக்கப்பட்ட உள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.300 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளன. இதற்காக 6 ஏக்கர் 98 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் 1.98 லட்ச சதுரஅடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!. தற்போது கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம்; திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்