< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எனது கோரிக்கையை விரைந்து முடிப்பதாக முதல்- அமைச்சர் உறுதியளித்தார் - வானதி சீனிவாசன்
|6 Nov 2024 7:02 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்
கோவை,
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
இன்று அரசு விழாவிற்காக கோவை வருகை தந்திருந்த முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளின் மனுவை வழங்கினேன். இதில் ஒரு சில கோரிக்கைகளை பற்றி அறிவிப்புகளை இன்று முதல்- அமைச்சர் வெளியிட்டு இருக்கிறார் அதற்காக கோவை தெற்கு தொகுதி மக்களுடைய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடர்பாக உள்ள சிக்கல்களை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று விரைந்து முடிப்பதாக உறுதியளித்தார். என தெரிவித்துள்ளார்.