< Back
மாநில செய்திகள்
ஆறுதல் அறிக்கை கூட முதல்-அமைச்சர் வெளியிடவில்லை - சரத்குமார்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஆறுதல் அறிக்கை கூட முதல்-அமைச்சர் வெளியிடவில்லை - சரத்குமார்

தினத்தந்தி
|
28 Dec 2024 10:01 PM IST

மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-அமைச்சரோ, துணைமுதல்-அமைச்சரோ ஆறுதல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-அமைச்சரோ, துணைமுதல்-அமைச்சரோ ஆறுதல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது மக்களின் மனக்குமுறலாக இருக்கிறது.

இந்த நிலையில் மாணவிக்கு ஆதரவாக, போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது ஏற்புடையதல்ல.

நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர் தலைவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, நீதிமன்ற விசாரணைகளுக்கு அரசு உண்மையான முழு ஒத்துழைப்பை வழங்கி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்