< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
|20 Nov 2024 9:57 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் சித்தூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வேலூர்,
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வீரப்பன், இளமதன், சின்ராஜ் ஆகியோர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் வாலிபர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து உடனே விரைந்த தனிப்படை போலீசார் சித்தூரில் பதுங்கி இருந்த வீரப்பன், இளமதன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.