< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலம் - கி.வீரமணி
மாநில செய்திகள்

'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலம்' - கி.வீரமணி

தினத்தந்தி
|
15 Dec 2024 7:45 PM IST

பா.ஜ.க. புதிய ஜனநாயக தத்துவத்தை உருவாக்கியிருக்கிறது என கி.வீரமணி தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலமாக இருக்கிறது. சிலரை விலைக்கு வாங்குகிறார்கள், கட்சியை உடைக்கிறார்கள். வென்றாலும் நாங்கள், தோற்றாலும் நாங்கள் என்ற புதிய ஜனநாயக தத்துவத்தை பா.ஜ.க. உருவாக்கியிருக்கிறது. அதன் பரிசோதனைக்கூடம்தான் உத்தர பிரதேசம்" என்றார்.

இதையடுத்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வானவில் அடிக்கடி தோன்றும், ஆனால் சூரியன் என்றும் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்" என்று கி.வீரமணி பதிலளித்தார்.

மேலும் செய்திகள்