< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து

தினத்தந்தி
|
27 Dec 2024 8:13 AM IST

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படித்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்