< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சை: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி
|1 Dec 2024 9:07 PM IST
தஞ்சையில் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
தஞ்சை,
தஞ்சை அய்யம்பேட்டை பகுதியில் வீட்டை இடிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த கட்டிடம் இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், குமார் ஆகிய 2 பேர் பலியாகி உள்ளனர்.
பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, பொதுமக்களும் உதவிக்கு வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.