< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..?
மாநில செய்திகள்

தஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
20 Nov 2024 12:04 PM IST

மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (26) பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்டார். சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி மரணம் அடைந்தார்.

இந்நிலையில் ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார்(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை கழுத்தில் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆசிரியை ரமணியை கொலை செய்த மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்