
கோப்புப்படம்
புதிய தாழ்தள மின்சார பஸ்களுக்கு டெண்டர்

மின்சார பஸ்கள் கொள்முதல் , பயன்பாடு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 600 தாழ்தள மின்சார பஸ்கள் கொள்முதல் , பயன்பாடு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரபட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் Procurement, Supply, Operation and Maintenance of 600 Low Floor Electric Buses and Development of Allied Electric and Civil Infrastructure on Gross Cost Contracting (GCC) in Phase 2 for MTC (Chennai) Ltd., இயக்குவதற்கு உரிமம் வழங்குவதற்காக தகுதிவாய்ந்த கீழ்க்காணும் ஆவண அத்தாட்சி சமர்ப்பிக்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி விபரம்:
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் 11.02.2025,
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் மற்றும் நேரம் 10.03.2025 பகல் 12.00 மணி,
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் மற்றும் நேரம் 03.04.2025 பகல் 16.00 வரை,
ஒப்பந்தப்புள்ளி திறப்பு நாள் மற்றும் நேரம் 03.04.2025 பிற்பகல் 16.30 மணிக்கு, முன் வைப்புத் தொகை ரூ.3,00,00,000/-, ஒப்பந்தபடிவம் திறப்புக்கு முன் நடக்கும் கூட்டம் 20.02.2025 15.00 மணி.
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் https://tntenders.gov.in/, https://mtcbus.tn.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பார்வையிட்டுக் கொள்ளலாம்.
ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app யில் மட்டுமே பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளில் மாற்றம் ஏதேனும் இருப்பின் அவ்விவரம் மேற்படி இணையதள முகவரியில் வெளியிடப்படும். ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் மேற்படி இணையதள முகவரியில் விபரத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை / ஒப்பந்தப்புள்ளிகளை எவ்வித காரணமும் விளக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளவோ / நிராகரிக்கவோ மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.