< Back
மாநில செய்திகள்
ஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
மாநில செய்திகள்

ஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

தினத்தந்தி
|
21 Nov 2024 7:23 AM IST

தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவரது காதலர் மதன்குமாரால் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கோவி.செழியன் ஆகியோர் கொலை நடந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் புகாரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கொலை நடந்த பள்ளியில் வாட்ச்மேன் இல்லை, நுழைவு கேட் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்