< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2024 2:50 AM IST

போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 59). இவர் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சேகர், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். உடனே இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்