< Back
மாநில செய்திகள்
தேயிலை தோட்டக் கழக தொழிளாளர்களுக்கு உடனடியாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தேயிலை தோட்டக் கழக தொழிளாளர்களுக்கு உடனடியாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
28 Oct 2024 9:21 PM IST

தேயிலை தோட்டக் கழக தொழிளாளர்களுக்கு உடனடியாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று இந்த அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக (டேன்டீ-TANTEA) தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

தீபாவளிக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை டேன்டீ தொழிளாளர்களுக்கு வழங்குமாறு மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்