< Back
தமிழக செய்திகள்

கோப்புப்படம்
தமிழக செய்திகள்
தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் - விஜய்

25 Jan 2025 12:04 PM IST
ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ் வாழ்க!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.