< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த  தமிழிசை
மாநில செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசை

தினத்தந்தி
|
22 Oct 2024 7:48 AM IST

அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு ,பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வளமான,வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தோளோடு தோள் நின்று உலக நாடுகள் பாராட்டும் வகையில் தீராத காஷ்மீர் எல்லை பிரச்சனை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற எங்களின் வழிகாட்டி பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம் மரியாதைக்குரிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்