< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெரியார் நினைவு நாள்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை
|24 Dec 2024 12:29 PM IST
பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பனையூர்,
பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார்.